பகவான் ஸ்ரீ ராமபிரான் அவதரித்த ராம நவமி நன்னாளில், அனைவருக்கும் ஶ்ரீ ராமபிரானின் அருளும் ஆசியும் குறைவின்றி கிடைக்கட்டும் எனப் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
ராமர் பிறந்த நாளாக ராம நவமி கொண்டாடப் படுகிறது. சித்திரை மாதத்தில் வளர்பிறை நவமியன்று ராமர் அவதரித்தார். சில ஆண்டுகளில் இந்த விழா, பங்குனி மாதத்திலும் வரும். இந்த ஆண்டு சித்திரை 04ஆம் தேதி ஏப்ரல் 17ஆம் நாளான இன்று ராம நவமி கொண்டாடப்படுகிறது.
ராம நவமியை முன்னிட்டு அயோத்தி ராமர் கோவிலில் சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு வருகின்றன. ஆயிரக்கணக்கான மக்கள் குழந்தை ராமரை தரிசித்து வருகின்றனர்.
இந்நிலையில், ராம நவமியை முன்னிட்டு அண்ணாமலை வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில்,
ஒழுக்கம் மற்றும் கருணையின் உருவான ஶ்ரீராமபிரான் அவதார தினமான ஶ்ரீராம நவமி, நாடெங்கும் இன்று சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது.
ஒழுக்கம் மற்றும் கருணையின் உருவான ஶ்ரீராமபிரான் அவதார தினமான ஶ்ரீராம நவமி, நாடெங்கும் இன்று சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது.
பகவான் ஸ்ரீ ராமபிரான் அவதரித்த இந்த நன்னாளில், அனைவருக்கும் ஶ்ரீ ராமபிரானின் அருளும் ஆசியும் குறைவின்றி கிடைக்கவும், அனைவரின் வாழ்விலும் அமைதியும்,… pic.twitter.com/2sRNByK1SY
— K.Annamalai (மோடியின் குடும்பம்) (@annamalai_k) April 17, 2024
பகவான் ஸ்ரீ ராமபிரான் அவதரித்த இந்த நன்னாளில், அனைவருக்கும் ஶ்ரீ ராமபிரானின் அருளும் ஆசியும் குறைவின்றி கிடைக்கவும், அனைவரின் வாழ்விலும் அமைதியும், மகிழ்ச்சியும், வளமும் கிடைக்கவும் வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன் எனக் குறிப்பிட்டுள்ளார்.