H-1B விசா கட்டுப்பாடுகளால் சிக்கல் : அமெரிக்க AI துறை பெரும் பின்னடைவை சந்திக்கும் - சிறப்பு தொகுப்பு!
Sep 27, 2026, 10:36 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

H-1B விசா கட்டுப்பாடுகளால் சிக்கல் : அமெரிக்க AI துறை பெரும் பின்னடைவை சந்திக்கும் – சிறப்பு தொகுப்பு!

Ramamoorthy S by Ramamoorthy S
Feb 10, 2026, 07:00 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

அமெரிக்க முன்னணி தொழில்நுட்ப நிறுவனங்கள்,வெளிநாட்டு AI துறை சார்ந்த வல்லுனர்களைப் பணியில் அமர்த்த தீவிரம் காட்டி வருகின்றனர். அதே நேரத்தில் H-1B விசாவுக்கான ட்ரம்பின் கடுமையான நடவடிக்கைகள், அமெரிக்காவின் AI துறைக்குப் பெரும் பாதிப்பை ஏற்படுத்தும் என்று எதிர்பார்க்கப் படுகிறது. அது பற்றிய ஒரு செய்தி தொகுப்பு.

அமெரிக்க அதிபர் ட்ரம்ப் கொண்டு வந்த H-1B விசா கட்டுப்பாடுகள் காரணமாக, 2025 நிதியாண்டில் இந்தியாவின் முக்கிய ஐடி நிறுவனங்கள் வெறும் 4,573 H-1B அனுமதிகளை மட்டுமே பெற்றுள்ளன. இது 2015 ஆம் ஆண்டு கிடைத்த H-1B விசா-க்களில் 70 சதவீதம் குறைவு என்பதும், கடந்த ஆண்டை விட 37 சதவீதம் குறைவு என்பதும் குறிப்பிடத்தக்கது.

மேலும், 2025 நிதியாண்டில் புதிய வேலைவாய்ப்புக்கான அங்கீகரிக்கப்பட்ட H-1B மனுக்களைக் கொண்ட முதல் 25 நிறுவனங்களின் பட்டியலில் மூன்று இந்திய நிறுவனங்கள் மட்டுமே இடம்பிடித்துள்ளன.

IT துறைகளுக்கான முன்னணி அமெரிக்க தொழில்நுட்ப நிறுவனங்கள் AI துறையில் அதிக கவனம் காட்டிவரும் நிலையில், AI தொழில் நுட்பத் திறன் உள்ளவர்களுக்கே H-1B விசா தேவை அதிகரித்துள்ளது.

தேசிய அமெரிக்க கொள்கை அறக்கட்டளையின் அமெரிக்க குடியேற்றத் தரவுகளின்படி, 2025 நிதியாண்டில் அமேசான், மெட்டா, கூகிள், மைக்ரோசாப்ட், ஆப்பிள் போன்ற முன்னணி தொழில்நுட்ப நிறுவனங்களில், புதிய H-1B பணிகளுக்கான labour condition எனப்படும் தொழிலாளர் நிபந்தனை விண்ணப்பங்களில் 80 சதவீதத்துக்கும் அதிகமானவை AI தொடர்பானவை ஆகும்.

ஏற்கெனவே H-1B விசாக்கள் மீதான அமெரிக்க அரசின் கடும் நடவடிக்கை காரணமாக, விசா புதுப்பித்தல் நேர்காணல்கள் 2027ம் ஆண்டு வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

மேலும், உலக அளவில் AI துறையில் முதன்மை நாடாக வேண்டும் என்ற அமெரிக்காவின் நோக்கத்தை அதிபர் ட்ரம்பின் H-1B விசா கட்டுப்பாடுகள் தடுத்துவிடும் என்று கூறப்படுகிறது.

2025-ல் AI துறையில் அமேசான், மெட்டா பிளாட்ஃபார்ம்கள், மைக்ரோசாப்ட் மற்றும் கூகுள் ஆகிய நிறுவனங்கள் அதிக அங்கீகரிக்கப்பட்ட புதிய H-1B மனுக்களைக் கொண்டிருந்தன.

AI செலவு மற்றும் பரந்த மூலதனச் செலவினத் திட்டங்களை பூர்த்தி செய்ய நிறுவனங்கள் வெளிநாட்டு திறமையாளர்களை வேலைக்கு அமர்த்தியுள்ளன.

மேலும் இந்நிறுவனங்கள் ஒவ்வொன்றும் தங்கள் மூலதனச் செலவினங்கள் 380 பில்லியன் அமெரிக்க டாலர்களைத் தாண்டும் என்று கணித்துள்ளன. குறிப்பாக, கூகுள் 185 பில்லியன் அமெரிக்க டாலர் வரையிலும், மெட்டா 300 பில்லியன் அமெரிக்க டாலருக்கும் அதிகமாகவும் மூலதன செலவுகளை கூட்ட திட்டமிட்டுள்ளன.

அமெரிக்க குடியேற்ற ஊதிய விதிகளின்படி, நிறுவனத்தின் செலவுகளைக் குறைக்க H-1B தொழிலாளர்களை வேலைக்கு அமர்த்தும் நிறுவனங்கள் கடுமையாக போராடுகின்றன. AI முதலீடுகள் நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்குப் பெரிதும் உதவியுள்ளதாக அமெரிக்க பொருளாதார வல்லுனர்கள் தெரிவித்துள்ளனர்.

இந்தச் சூழலில்,அமெரிக்க அரசின் புதிய குடியேற்ற கட்டுப்பாடுகள், AI துறையில் வெளிநாட்டுத் திறமையானவர்களைப் பணியமர்த்துவதில் பெரும் தடையை ஏற்படுத்துகிறது என்று ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

இதனால் AI துறை வளர்ச்சியில் அமெரிக்கா பெரும் பின்னடைவை சந்திக்கும் என்று பொருளாதார வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர். உண்மையில் ட்ரம்பின் நடவடிக்கையால் AI துறையில் சீனாவுக்கு எதிராக அமெரிக்க ஆதிக்கம் செலுத்துமா ? என்பதே கேள்விக்குறியாக உள்ளது

Tags: h1b visa feeIndia-US trade agreement.h1b visa usaindia us trade deal agreementmodi h1b visaindia us trade agreement collapseh1b visa newsbilateral trade agreementh1b visa ruleh1b visa costh1b visa feesUS india trade agreementh1b visa impactH1B visaus h1b visa newsh1b visash1b visa us newsus h1b visaus jobs h1b visa
Share
Tweet
SendShare
Previous Post

மார்ச் 1 முதல் யுடிஎஸ் மொபைல் செயலி நிறுத்தம் – ரயில்வே நிர்வாகம் அறிவிப்பு!

Next Post

ராமநாதபுரத்தில் தேர்தலை கருத்தில் கொண்டு திமுக சார்பில் பரிசு பொருட்கள் விநியோகிப்பதாக குற்றச்சாட்டு!

Related News

காப்பீட்டு விநியோக விதிகளில் மாற்றம் : பாலிசிதாரர்களுக்கு அதிக நன்மை – சிறப்பு தொகுப்பு!

கான்பூர் தொழிலதிபர் கொலையில் திருப்பம் : குடி, சூதாட்டத்தால் கடனாளியான மகனே தீர்த்துக்கட்டியது அம்பலம் – சிறப்பு தொகுப்பு!

திருப்பரங்குன்றம் தீபத்தூணில் தீபம் ஏற்றக்கோரி அக்.11-ல் ஆர்ப்பாட்டம் – இந்து முன்னணி அறிவிப்பு!

ஆர்.டி.ஐ சட்டத்தில் சட்டம் – ஒழுங்கு பிரிவுக்கு விலக்கு அளித்து பிறப்பிக்கப்பட்ட அரசாணை ரத்து!

ஏரியில் சட்டவிரோதமாக மணல் அள்ளிய விவகாரம் – எ.வ.வேலு மீது வழக்குப்பதிவு!

இந்தியாவுடன் மோத துணியும் பயங்கரவாதிகளுக்கு தக்க பதிலடி கொடுக்கப்படும் – பிரதமர் மோடி

Load More

அண்மைச் செய்திகள்

ஓட்டுக்கு பணம் கொடுக்க மாட்டோம் என்று கூறிவிட்டு எம்எல்ஏக்களை விலைக்கு வாங்குகின்றனர் – தமிழிசை சௌந்தரராஜன்

கோவையில் உயிரை பணயம் வைத்து குட்கா கடத்தல் கும்பலை மடக்கி பிடித்த தலைமைக்காவலர் – குவியும் பாராட்டு!

7 நாள் போர் நிறுத்த முன்மொழிவு நிராகரிப்பு மீண்டும் ஈரான் மீது தாக்குதல் நடத்த அமெரிக்கா திட்டம் – சிறப்பு தொகுப்பு!

தேர்தல் ஆணையத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பால் அம்பலமான ராகுலின் காந்தியின் நாடகம் – நயினார் நாகேந்திரன்!

தாராபுரம் இடைத்தேர்தல் மோதல் குறித்து காவல்துறை விசாரணை – அமைச்சர் சம்பத்குமார் தகவல்!

புதுச்சேரியில் மார்டின் அறக்கட்டளை சார்பில் இலவச UPSC பயிற்சி மையம் – துணைநிலை ஆளுநர் கைலாஷ்நாதன் தொடங்கி வைத்தார்!

ஆசிய விளையாட்டு கபடி போட்டி ; மகளிர் அணியை தொடர்ந்து ஆடவர் அணியும் தங்கப் பதக்கம் வென்று சாதனை!

தனியார் கல்லூரியில் நடந்த விருதுகள் வழங்கும் விழா; கண்கலங்கிய சபாநாயகர்

ஆசிய விளையாட்டு ஹாக்கி தொடர்; இந்திய மகளிர் மற்றும் ஆடவர் அணி தங்கம் வென்று சாதனை

அரிசி தட்டுப்பாட்டால் ரொட்டிக்கு மாறிய மக்கள் : கோதுமைக்காக இந்தியாவை நாடும் வங்கதேசம் – சிறப்பு தொகுப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies