பாரீஸ் ஒலிம்பிக் போட்டிக்கான ஒலிம்பிக் தீபம் கிரீஸ் நாட்டின் ஒலிம்பியாவில் ஏற்றப்பட்டது.
33-வது ஒலிம்பிக் விளையாட்டு போட்டி பிரான்ஸ் தலைநகர் பாரீசில் ஜூலை 26-ம் தேதி முதல் ஆகஸ்டு 11-ம் தேதி வரை நடைபெறவுள்ளது.
இந்த போட்டிக்கான ஒலிம்பிக் தீபம், ஒலிம்பிக் பிறந்த இடமான கிரீஸ் நாட்டின் ஒலிம்பியாவில் ஏற்றப்பட்டது. கிரேக்கத்தின் பாரம்பரிய உடையணிந்த நடிகை மேரி மினா சூரிய கடவுளை வணங்கி விட்டு, சிறிய பானையில் எரிந்து கொண்டிருந்த ஜூவாலையில் தீபத்தை ஏற்றினார்.
அதன் பிறகு ஒலிம்பிக் சாம்பியனான கிரீஸ் துடுப்பு படகு வீரர் ஸ்டீபனோஸ் நிடோஸ்கோஸ் முதல் நபராகவும், அதைத் தொடர்ந்து பிரான்ஸ் நீச்சல் வீராங்கனை லாரே மனவ்டோவும் சிறிது தூரம் தீபத்தை தொடர் ஓட்டமாக எடுத்துச் சென்றனர்.
கிரீஸ் நாடு முழுவதும் 5 ஆயிரம் கிலோமீட்டர் தூரம் தீபம் கொண்டுசெல்லப்பட்டு பின்னர் வருகிற 26-ந்தேதி பாரீஸ் ஒலிம்பிக் கமிட்டியிடம் தீபம் ஒப்படைக்கப்படுகிறது.