ஐபிஎல் தொடரின் 32-வது போட்டி அகமதாபாத் நரேந்திர மோடி மைதானத்தில் குஜராத் டைட்டன்ஸ் மற்றும் டெல்லி கேபிட்டல்ஸ் அணிகளுக்கு இடையே நடைபெறவுள்ளது.
இந்தியன் பிரீமியர் லீக்கின் 17-வது சீசன் மார்ச் 22 ஆம் தேதி தொடங்கியது. இதில் மொத்தம் 10 அணிகள் பங்குபெற்றுள்ளது.
இதில் சென்னை சூப்பர் கிங்ஸ், டெல்லி கேப்பிட்டல்ஸ், குஜராத் டைட்டன்ஸ்,கொல்கத்தா நைட் ரைடர்ஸ், லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ், மும்பை இந்தியன்ஸ், பஞ்சாப் கிங்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸ், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு, சன் ரைசர்ஸ் ஹைதராபாத் ஆகிய அணிகள் கலந்து கொண்டுள்ளன.
இந்த தொடரின் 32-வது போட்டி இன்று அகமதாபாத், நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெறவுள்ளது. இதில் குஜராத் டைட்டன்ஸ் மற்றும் டெல்லி கேபிட்டல்ஸ் அணிகள் விளையாடவுள்ளது.
இதுவரை இவ்விரு அணிகளும் 3 போட்டிகளில் நேருக்கு நேர் மோதியுள்ளது. இதில் குஜராத் டைட்டன்ஸ் அணி 2 முறையும், டெல்லி கேபிட்டல்ஸ் ஐ 1 முறையும் வெற்றி பெற்றுள்ளது.
குஜராத் டைட்டன்ஸ் அணி இதுவரை நரேந்திர மோடி மைதானத்தில் 13 போட்டிகளில் விளையாடியுள்ளது. அதில் 8 போட்டிகளில் குஜராத் அணி வெற்றியும், 5 போட்டிகளில் தோல்வியும் அடைந்துள்ளது.
அதேபோல் டெல்லி கேபிட்டல்ஸ் அணி நரேந்திர மோடி மைதானத்தில் இதுவரை 6 போட்டிகளில் விளையாடியுள்ளது. இதில் டெல்லி அணி 4 போட்டிகளில் வெற்றியும், 2 தோல்வியும் அடைந்துள்ளது.
மேலும் இன்றையப் போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் அணி 57% வெற்றி பெறும் என்றும் டெல்லி கேபிட்டல்ஸ் அணி 43% வெற்றி பெறும் என்றும் இணையத்தில் பதிவிட்டுள்ளது.