மாதிரிமங்கலம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் பணிபுரியும் மருத்துவர் இருசக்கர வாகனத்தில் செல்லும்போது சாலையில் கிடந்த ஜல்லிகற்கள் சறுக்கி கீழே விழுந்து
மரணம் அடைந்தார்.
மயிலாடுதுறை மாவட்டம், குத்தாலம் அருகே ஏற்பட்ட சாலை விபத்தில் அரசு மருத்துவர் பரிதாபமாக உயிரிழந்தார். பண்டாரவடை கிராமத்தைச் சேர்ந்த நூருல் ஹக், மாதிரிமங்கலம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் மருத்துவராக பணிபுரிந்து வந்துள்ளார்.
இந்நிலையில் இவர் வழக்கம்போல் பணியை முடித்துவிட்டு தனது இருசக்கர வாகனத்தில் வீடு நோக்கித் திரும்பியுள்ளார். அப்போது சாலையில் கிடந்த ஜல்லிகற்கள் சறுக்கி கீழே விழுந்து படுகாயமடைந்த நூருல் ஹக், மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் பரிதாபமாக உயிரிழந்தார். அரசு மருத்துவர் உயிரிழப்பால் அப்பகுதி மக்கள் சோகத்தில் ஆழ்ந்துள்ளனர்.