2024 டி20 உலகக்கோப்பை தொடரின் இந்திய அணியின் தொடக்க வீரராக ரோகித் சர்மாவுடன் விராட் கோலி இறங்குவதாக தகவல் வெளியாகியுள்ளது.
2024 டி20 உலகக்கோப்பை தொடருக்கான இந்திய அணித் தேர்வு விரைவில் நடைபெறவுள்ளது. அதற்கு முன்பாக தேர்வுக் குழு தலைவர் அஜித் அகர்கர் மற்றும் கேப்டன் ரோஹித் சர்மா மற்றும் பயிற்சியாளர் ராகுல் டிராவிட் சந்தித்து பேசியுள்ளனர்.
அதில் முக்கிய முடிவாக தொடக்க வீரர் ஜெய்ஸ்வாலை அணியில் இருந்து நீக்கி விட்டு விராட் கோலியை தொடக்க வீரராக களமிறக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஜெய்ஸ்வாலை மாற்று தொடக்க வீரராகக் கூட அணியில் தேர்வு செய்ய போவதில்லை என்றும், அவருக்கு பதிலாக மாற்று தொடக்க வீரராக சுப்மன் கில்லை தேர்வு செய்ய உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
2022 ஆம் ஆண்டு டி20 உலகக்கோப்பை தொடரில் இந்திய அணி அரையிறுதியில் தோல்வியடைந்து வெளியேறிய போது இந்திய அணியில் சில முக்கிய மாற்றங்களை செய்வது குறித்து விவாதிக்கப்பட்டது.
இந்த அணித் தேர்வு கூட்டத்தில் தேர்வுக் குழு தலைவர் அஜித் அகர்கர், இந்திய அணி கேப்டன் ரோஹித் சர்மா மற்றும் பயிற்சியாளர் ராகுல் டிராவிட் ஆகியோர் பங்கேற்றனர்.
டி20 உலகக்கோப்பை தொடருக்கான 15 பேர் கொண்ட இந்திய அணியில் இடம் பெறப் போகும் வீரர்கள் யார், யார் என்ற விவாதம் நடந்துள்ளது. இதில் குறிப்பாக ஹர்திக் பாண்டியா குறித்து நீண்ட விவாதம் நடந்ததாக கூறப்படுகிறது.
2024 ஐபிஎல் தொடரில் ஹர்திக் பாண்டியா அதிக ஓவர்கள் பந்து வீச வேண்டும், அதில் தாக்கத்தை ஏற்படுத்த வேண்டும் என விவாதிக்கப்பட்டுள்ளது.