“தமிழகத்தில் நேர்மையான அரசியல் மாற்றம் உருவாகிட பாஜகவிற்கு வாக்களியுங்கள் எனப் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
நாடு முழுவதும் நாடாளுமன்ற தேர்தல் வரும் 19-ஆம் தேதி தொடங்கி ஜூன் 1-ஆம் தேதி வரை 7 கட்டங்களாக நடைபெற உள்ளது. தமிழகம் மற்றும் புதுச்சேரியில் உள்ள 40 தொகுதிகளிலும் ஒரே கட்டமாக வரும் 19-ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற உள்ளது.
இதற்கான இறுதி தேர்தல் பிரச்சாரம் இன்று மாலை 6 மணியுடன் ஓய்கிறது. இந்நிலையில் பாஜகவிற்கு வாக்களியுங்கள் என அண்ணாமலை தனது எக்ஸ் பதிவில் வீடியோ வெளியிட்டு வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இது குறித்து அண்ணாமலை வெளியிட்ட எக்ஸ் பதிவில்,
“தமிழகத்தில் நேர்மையான அரசியல் மாற்றம் உருவாகிட, இளைஞர்களுக்கான அரசியல் பிறந்திட, அனைவருக்கும் சமவாய்ப்புகள் மலர்ந்திட, கொங்கு மண்ணின் பெருமை நாடு முழுவதும் அறியப்பட, வளர்ச்சிப் பாதையில் கோவை மீண்டும் பயணிக்க, கோவை பாராளுமன்ற வாக்காளப் பெருமக்கள் அனைவரும் தாமரை சின்னத்தில் வாக்களிக்க வேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ளார்.
தமிழகத்தில் நேர்மையான அரசியல் மாற்றம் உருவாகிட, இளைஞர்களுக்கான அரசியல் பிறந்திட, அனைவருக்கும் சமவாய்ப்புகள் மலர்ந்திட, கொங்கு மண்ணின் பெருமை நாடு முழுவதும் அறியப்பட, வளர்ச்சிப் பாதையில் கோவை மீண்டும் பயணிக்க, கோவை பாராளுமன்ற வாக்காளப் பெருமக்கள் அனைவரும் தாமரை சின்னத்தில்… pic.twitter.com/w8ltpvL29R
— K.Annamalai (மோடியின் குடும்பம்) (@annamalai_k) April 17, 2024