துபாயில் இடைவிடாது பெய்து வரும் கனமழையால் இரண்டாவது நாளாக விமான சேவை பாதிக்கப்பட்டுள்ளது.
துபாய், ஓமன் உள்ளிட்ட பகுதிகளில் இடி மின்னலுடன் பலத்த மழை பெய்யும் என அந்நாட்டு வானிலை மையம் முன்பே அறிவித்திருந்தது.
அதன் படி இடி மின்னலுடன் மிக கனமழை இடை விடாமல் பெய்து வந்தது. இதனால் சாலைகள். பள்ளமான பகுதிகள் தொழில் நிறுவனங்கள், விமான நிலையங்களில் மழை நீர் சூழ்ந்தது. இதனால் இரண்டாவது நாளாக விமான சேவை பாதிக்கப்பட்டுள்ளதன் காரணமாக பயணிகள் கடும் அவதியடைந்துள்ளனர்.
மேலும், சென்னை விமானநிலையத்தின் சர்வதேச முனையத்தில் இன்று அதிகாலை முதல் துபாய், சார்ஜா, குவைத் பகுதிகளுக்கு செல்லும் 5 விமானங்கள், அதேபோல் மேற்கண்ட நாடுகளில் இருந்து சென்னைக்கு வரவேண்டிய 5 விமானங்கள் என மொத்தம் 10 விமானங்களின் சேவைகள் ரத்து செய்யப்பட்டு உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.