நாடு முழுவதும் 21 மாநிலங்களில் உள்ள 102 மக்களவை தொகுதிகளுக்கு நாளை வாக்குப்பதிவு நடைபெற உள்ளது.
நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு நாளை முதற்கட்டமாக தமிழகம் மற்றும் புதுச்சேரி உள்ளிட்ட 21 மாநிலங்களுக்கு வாக்கு பதிவு நடைபெற உள்ளது. மொத்தமுள்ள 534 மக்களவைத் தொகுதிகளில் 102 தொகுதிகளுக்கு முதல் கட்டத் தேர்தல் நாளை நடைபெறுகிறது.
நேற்று மாலை 6மணிக்கு பிரச்சாரம் முடிவடைந்த நிலையில் அனைத்து வாக்கு சாவடிகளிலும் பாதுகாப்பு பணிகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
முதல் கட்டமாக 102 தொகுதிகளுக்கான வாக்கு பதிவு நடைபெற உள்ள நிலையில் மொத்தமாக 8 மத்திய அமைச்சர்கள், 2 முன்னாள் முதல்வர்கள், மற்றும் முன்னாள் ஆளுநர் உள்ளிட்டோர் களத்தில் இறங்கி போட்டியிடுகின்றனர்.