சென்னை திருவொற்றியூர் காலடிப்பேட்டை கல்யாண வரதராஜ பெருமாள் திருக்கோவிலில் ராமர் உற்சவத்தின் கடைசி நாளான ராமநவமி நாளான நேற்று அலங்கரிக்கப்பட்ட சீதாராமர் லட்சுமணருடன் பக்தர்களுக்கு காட்சி அளித்தார்
ராமர் பிறந்த தினத்தை ஸ்ரீராம நவமியாக கொண்டாடப்படும் நிலையில் பெருமாள் கோவிலில் சீதா கல்யாண விழா விமரிசையாக நடைபெற்றது.
முன்னதாக உற்சவர்கள் மணப்பெண்ணாக சீதாவும் மணமகனாக இராமனும் அலங்காரப் கோலத்தில் வீற்றிருக்க, ஏராளமான பக்தர்கள் குடை சூழ ராமர் சீதா கல்யாணம் நடைபெற்றது.
இதனை அடுத்து கோதண்டராமர் மலர் மாலைகளால் அலங்கரிக்கப்பட்டு சீதா, ராமர் கல்யாண அலங்காரத்தில் லட்சுமணர், அனுமன் உடன் பட்டாபிஷேக கோலத்தில் நான்கு மாட வீதிகளிலும் வலம் வந்தார். அப்பொழுது, பக்தர்கள் வழிநெடுகிலும் தேங்காய் உடைத்து ஆரத்தி எடுத்து வழிபட்டனர்.