உலக பாரம்பரிய தினத்தை முன்னிட்டு இன்று மாமல்லபுரத்தில் உள்ள புராதன சின்னங்களை இலவசமாக சுற்றிப் பார்க்கலாம் என தொல்லியல் துறை அறிவித்துள்ளது.
உலக பாரம்பரிய தினம் இன்று நாடு முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது. சுற்றுலா பயணிகள் பொதுமக்களிடையே சமூக கலாச்சார பாரம்பரிய விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் கொண்டாடப்பட்டு வருகிறது.
இதனை சிறப்பிக்கும் வகையில் மாமல்லபுரத்தில் உள்ள புராதன சின்னங்களை இலவசமாக சுற்றிப் பார்க்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
மாமல்லபுரத்தில் உள்ள புராதான சின்னங்களான ஐந்து ரதம், கடற்கரை கோவில்,அர்ஜுனன் தபசு ஆகிய பகுதிகளை உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை இலவசமாக அனுமதிக்கப்படுவார்கள் என தொல்லியல் துறை அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
இந்நிலையில் இன்று அதிக அளவில் சுற்றுலா பயணிகள் மாமல்லபுரத்தில் புராதான சின்னங்களை சுற்றி பார்க்க குவிந்து வருகின்றனர்.