உத்தரப் பிரதேசத்தில் ராகுல் ஒரு தொகுதியில் கூட வெற்றி பெற முடியாது என பாஜக செய்தி தொடர்பாளர் ரவிசங்கர் பிரசாத் தெரிவித்துள்ளார்.
இன்று செய்தியாளர்களிடம் பேசிய பாஜக செய்தி தொடர்பாளர் ரவிசங்கர் பிரசாத்,
ராகுல் பகல் கனவு காண்கிறார். நீங்கள் ஏன் கவலைப்படுகிறீர்கள்?. உத்தரப் பிரதேசத்தில் இரண்டு நண்பர்கள் ஒன்றாகச் சேர்ந்துள்ளனர். என்ன நடக்கும் என்பதை நீங்கள் பார்ப்பீர்கள். உத்தரப் பிரதேசத்தில் ராகுல் ஒரு தொகுதியில் கூட வெற்றி பெற முடியாது.
நாட்டு மக்கள் பிரதமர் மோடி தலைமையிலான ஆட்சியை விரும்புகிறார்கள். எந்த திசையில் காற்று வீசுகிறது என்பதை அகிலேஷ் யாதவ் மற்றும் ராகுலால் புரிந்து கொள்ள முடியவில்லை. கடந்த மக்களவைத் தேர்தலில் அதிகமான ஓட்டு வித்தியாசத்தில் வெற்றி பெற்றோம் என்பது உங்கள் அனைவருக்கும் தெரியும். இந்த முறையும் பாஜக வெற்றி பெறும்” என்று தெரிவித்தார்.