நாடாளுமன்ற தேர்தலையொட்டி கிளாம்பாக்கத்திலிருந்து 10 ஆயிரத்து 214 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுவதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் உள்ள 39 மக்களவைத் தொகுதிகளுக்கான தேர்தல் மற்றும் விளவங்கோடு சட்டமன்றத் தொகுதிக்கான இடைத்தேர்தல் ஆகியவை, நாளைய தினம் நடைபெறவுள்ளது.
இதனையடுத்து தேர்தலன்று தமிழகம் முழுவதும் பொது விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் தேர்தலையொட்டி சொந்த ஊர் செல்லும் பொதுமக்களின் வசதிக்காக, கிளாம்பாக்கம் பேருந்து முனையத்திலிருந்து 10 ஆயிரத்து 214 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகிறது.