ஆந்திர பிரதேசத்தில் பந்தர் சாலையில் உள்ள ஒரு குடோனில் திடீர் தீ விபத்து ஏற்பட்டது.
குடோனில் உள்ள மற்ற பகுதிகளில் தீ வேகமாக பரவியது. தீ பாதித்த பகுதிகளில் இருந்து வெளியேறிய கரும்புகை, அக்கம் பக்கம் எங்கும் பரவியதால் பொது மக்கள் கண் எரிச்சல் உள்ளிட்டவையால் அவதியடைந்தனர்.
தீ விபத்து குறித்து தகவல் அறிந்த தீயணைப்பு படை வீரர்கள் விரைந்து சென்று தீயை கட்டுப்படுத்தும் பணியில் ஈடுபட்டனர்.