மணிப்பூர் மாநிலத்தில், உள் மணிப்பூர் மற்றும் வெளி மணிப்பூர் ஆகிய இரண்டு தொகுதியில் நாளை வாக்குப்பதிவு நடைபெறுகிறது.
நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு நாளை முதற்கட்டமாக 21 மாநிலங்களுக்கு வாக்கு பதிவு நடைபெற உள்ளது. மொத்தமுள்ள 534 மக்களவைத் தொகுதிகளில் 102 தொகுதிகளுக்கு முதல் கட்டத் தேர்தல் நாளை நடைபெறுகிறது.
இதில், மணிப்பூர் மாநிலத்தில், உள் மணிப்பூர் மற்றும் வெளி மணிப்பூர் ஆகிய இரண்டு தொகுதியில் முதற்கட்ட வாக்குப்பதிவு நாளை நடைபெறுகிறது.
இந்த தொகுதிகளுக்கு உட்பட்ட பகுதிகளுக்கு, மேற்கு இம்பாலில் உள்ள லாம்பேல்பட்டில் இருந்து வாக்குப் பதிவு இயந்திரங்கள், பலத்த போலீஸ் பாதுகாப்புடன் அனுப்பிவைக்கப்பட்டன.