கடந்த 10 ஆண்டு கால பாஜக ஆட்சியில் நாட்டின் எல்லைகள் பாதுகாப்பாக உள்ளதாக உத்தரப்பிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் தெரிவித்துள்ளார்.
புலந்த்ஷாஹரில் நடைபெற்ற தேர்தல் பிரச்சார கூட்டத்தில் பேசிய அவர்,
நாட்டில் நக்சல் மற்றும் தீவிரவாதம் ஒடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார். ஆனால் காங்கிரஸ் ஆட்சியில், தீவிரவாதம் தலைவிரித்தாடியதாகவும் அவர் கூறினார். உலக அளவில் இந்தியாவின் மீதான மரியாதை உயர்ந்துள்ளதாகவும் அவர் கூறினார்.