சென்னை வேளச்சேரியில் உள்ள ஓட்டுச்சாவடியில், தமிழக ஆளுநர் ஆர்.என். ரவி, மனைவியுடன் வந்து ஓட்டுப் போட்டு தனது ஜனநாயக கடமையை நிறைவேற்றினார்.
தமிழகத்தில் மொத்தம் உள்ள 39 தொகுதிகளுக்கும் இன்று ஒரே கட்டமாக தேர்தல் நடக்கிறது.
சென்னை வேளச்சேரியில் உள்ள ஓட்டுச்சாவடியில் கவர்னர் ரவி, மனைவி லட்சுமி உடன் வந்து வாக்களித்தார்.
பின்னர் செய்தியாளரிடம் பேசிய ஆளுநர் ரவி,
‛‛ முதல் முறை வாக்காளர்கள், தேர்தல் திருவிழாவில் பங்கேற்று அதிக அளவில் ஓட்டு போட வேண்டும் ” என்று வலியுறுத்தினார்.