மகாராஷ்டிரா மாநிலம் நாக்பூரில் ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத் வாக்களித்தார்.
மக்களவைத் தேர்தலில், இன்று முதல்கட்டமாக 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் ஓட்டுப்பதிவு துவங்கி அமைதியாக நடந்து வருகிறது.
இந்நிலையில் மகாராஷ்டிரா மாநிலம் நாக்பூரில் ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத் வாக்களித்தார்.
பின்னர் செய்தியாளரிடம் பேசிய ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத்,
வாக்களிப்பது நமது கடமை மற்றும் உரிமை, 100 சதவீத வாக்குப்பதிவை எட்ட வேண்டும் எனத் தெரிவித்தார்.