காந்தி நகர் தொகுதியில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா வேட்பு மனுவை தாக்கல் செய்தார்.
குஜராத் மாநிலம் காந்தி நகர் தொகுதி பாஜகவின் கோட்டையாக கருதப்படுகிறது. கடந்த 1998ஆம் ஆண்டு முதல் 2018ஆம் ஆண்டு வரை பாஜக மூத்த தலைவரும், முன்னாள் துணை பிரதமருமான எல்.கே.அத்வானி காந்தி நகர் எம்பியாக பதவி வகித்தார்.
கடந்த 2019ஆம் ஆண்டு காந்தி நகர் தொகுதியில் அமித் ஷா போட்டியிட்டார். சுமார் 5 லட்சத்து 57 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் அவர் வெற்றி பெற்றார். இந்நிலையில் இரண்டாவது முறையாக காந்தி நகர் தொகுதியில் அமித் ஷா போட்டியிடுகிறார். இதனையொட்டி இன்று அவர் தனது வேட்பு மனுவை தாக்கல் செய்தார்.