தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் அரசியல் கட்சித் தலைவர்கள், முக்கிய பிரமுகர்கள் வாக்குச்சாவடியில் காத்திருந்து தங்கள் வாக்குகளை பதிவு செய்தனர்.
சென்னை, கோயம்பேட்டில் உள்ள வாக்குச்சாவடியில் மத்திய இணை அமைச்சரும் நீலகிரி தொகுதி வேட்பாளருமான எல்.முருகன் தனது ஜனநாயக கடமையை ஆற்றினார்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், வாக்களிக்க வேண்டியது அனைவரின் கடமை என தெரிவித்தார்.