தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் அரசியல் கட்சித் தலைவர்கள், முக்கிய பிரமுகர்கள் வாக்குச்சாவடியில் காத்திருந்து தங்கள் வாக்குகளை பதிவு செய்தனர்.
கோவை தெற்கு பாஜக சட்டமன்ற உறுப்பினர் வானதி சீனிவாசன் தனியார் பள்ளியில் உள்ள வாக்குச்சாவடிக்கு வருகை தந்து வாக்களித்தார். இதனைதொடர்ந்து பேசிய அவர், எதிர்க்கட்சியினர் கோடிக்கணக்கான பணத்தை கொட்டி கொடுத்தாலும் கோவையில் தாமரை மலருமென்று தெரிவித்தார்.
சென்னை திருவான்மியூரில் உள்ள வாக்குச்சாவடிக்கு வந்த பாஜக வேட்பாளர் ராதிகா மற்றும் அவருடைய கணவர் சரத்குமார், வாக்களித்து ஜனநாயக கடமையாற்றினர். அப்போது பேசிய அவர், இந்த தேர்தல் மாற்றம், முன்னேற்றம், வளர்ச்சி என தெரிவித்தார்.
சென்னை, பட்டினப்பாக்கத்தில் உள்ள வாக்குச்சாவடியில் தேசிய மகளிர் ஆணைய உறுப்பினர் குஷ்பு தனது ஜனநாயக கடமையாற்றினார். அப்போது செய்தியாளர்களை சந்தித்த அவர் வாக்களிப்பது நமது அடிப்படை உரிமை என்று கூறினார்.
சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள வாக்குச்சாவடியில் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஜி.கே.வாசன் தனது ஜனநாயக கடமையை ஆற்றினார்.