காங்கிரஸ் வேட்பாளர் நிச்சயமாக டெபாசிட் இழப்பார் என புதுச்சேரி பாஜக வேட்பாளர் நமச்சிவாயம் தெரிவித்துள்ளார்.
புதுச்சேரியில் மக்களவை தேர்தலுக்கான வாக்குப்பதிவு 7 மணிக்கு தொடங்கியது. இதற்கிடையே புதுச்சேரி நாடாளுமன்ற தொகுதி பாஜக வேட்பாளர் நமச்சிவாயம், மனைவியுடன் தனது வாக்கினை செலுத்தினார்.
வில்லியனூர் மணவெளி பகுதியில் உள்ள அரசுப் பள்ளியில் வாக்களித்த பின் அவர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர்,
இஸ்லாமியர்கள் கூட பாஜகவுக்கு வாக்களித்து வருவதாக கூறினார். மேலும், தான் மிகப்பெரிய வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறுவேன் எனவும் காங்கிரஸ் வேட்பாளர் நிச்சயமாக டெபாசிட் இழப்பார் எனத் தெரிவித்தார்.