இராமேஸ்வரத்தில் 65 வயது மூதாட்டியின் வாக்கை மற்றொருவர் மாற்றி போட்டதால் சலசலப்பு ஏற்பட்டது. மீண்டும் 49ஓ வை பயன்படுத்தி மூதாட்டி வாக்கை பதிவு செய்தார்.
தமிழகத்தில் 39 மக்களவை தொகுதி மற்றும் விளவங்கோடு சட்டப்பேரவை தொகுதியில் காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கி நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் ராமேஸ்வரம் வேர்க்கோடு பகுதியில் புனித ஜோசப் மேல்நிலைப் பள்ளியில் 312 வாக்குச்சாவடி மையம் அமைக்கப்பட்டுள்ளது.
இங்கு எம்.ஆர்.டி நகர் பகுதியைச் சேர்ந்த 65 வயதுடைய மூதாட்டி லெட்சுமி தனது ஜனநாயக கடமையை தள்ளாடும் வயதில் ஆற்றுவதற்காக வந்தபோது அவருடைய ஓட்டை மற்றொருவர் போட்டுவிட்டதாக அதிகாரிகள் கூறியதை அடுத்து மூதாட்டி அதிர்ச்சி அடைந்துள்ளார்
இதனை அடுத்து தள்ளாடும் வயதிலும் வாக்களிக்க வந்த மூதாட்டி வாக்களிக்க முடியாமல் ஏமாற்றத்துடன் வீடு திரும்பி உள்ளார்.
இதனால் வாக்குச் சாவடி மையத்தில் சிறிது நேரம் வாக்குப்பதிவு நிறுத்தப்பட்டது. இதனால் வாக்களிக்க வந்த மற்ற நபர்கள் கூச்சலிட்டதால் சிறிது நேரம் சலசலப்பு ஏற்பட்டது.
மேலும் வாக்குசாவடியில் பணியாற்றும் அதிகாரிகள் மூதாட்டியின் முகவரியை மட்டும் எழுதி விட்டு சமாதானப்படுத்தி வெளியே அனுப்பி வைத்தனர், மீண்டும் 49ஓ வை பயன்படுத்தி அவர் வாக்கை பதிவு செய்தார்.