‘காங்கிரஸ் காலாவதியாகி விட்டது, தேசத்தைக் கட்டியெழுப்புவதற்காகவே பாஜக அரசியல் செய்கிறது’ என மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார்.
இது குறித்து பேசிய மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்,
காங்கிரஸ் முற்றிலும் காலாவதியாகிவிட்டது என்று நான் கூற விரும்புகிறேன். காங்கிரஸ் திருப்திப்படுத்தும் அரசியலில் ஈடுபட்டது. பாஜக மதத்தின் அடிப்படையில் அரசியல் செய்யாது.
ஆனால் அது நீதி மற்றும் மனிதநேயத்தின் அடிப்படையிலானது. தேசத்தைக் கட்டியெழுப்புவதற்காகவே பாஜஅரசியல் செய்கிறது. தெலுங்கானாவில் ஆட்சியில் உள்ள காங்கிரஸ் தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை.
தெலுங்கானா மாநிலம் உருவானதற்கான பெருமை பி.ஆர்.எஸ்.,க்கு செல்லக்கூடாது. இது பலரின் தியாகங்களுக்கு கிடைத்த வெற்றி. பிரதமர் மோடி தலைமையிலான பாஜக ஆட்சியில் ஒரு ஊழல் குற்றச்சாட்டு கூட இல்லை. நாட்டில் 25 கோடி மக்கள் வறுமையில் இருந்து மீண்டுள்ளனர் எனத் தெரிவித்தார்.