நாடு முழுவதும் 102 தொகுதிகளில் நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலின முதல்கட்ட வாக்குப்பதிவில் 64 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளன.
நாடாளுமன்ற தேர்தலுக்கான முதல் கட்ட வாக்குப்பதிவு தமிழகம், உத்தரகாண்ட் அருணாசல பிரதேசம் , மேகாலயா, மிசோரம் , நாகாலாந்து , சிக்கிம் உள்ளிட்ட 21 மாநிலங்களில் உள்ள 102 தொகுதிகளில் நேற்று நடைபெற்றது.
இதற்காக ஒரு லட்சத்து 87 ஆயிரம் வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டிருந்தன. இந்த வாக்குச்சாவடிகளில்ஆண்களும், பெண்களும் நீண்ட வரிசையில் நின்று ஆர்வமுடன் வாக்களித்தனர்.
ஓரிரு சம்பவங்களை தவிர பொதுவாக வாக்குப்பதிவு அமைதியாக நடைபெற்றது. இந்நிலையில் முதல் கட்ட வாக்குப்பதிவில் 64 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளதாக தலைமை தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
அதிக அளவாக திரிபுரா மாநிலத்தில் 80 புள்ளி 6 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளது. பீகார் மாநிலத்தில் மிகக்குறைவாக 48 புள்ளி 5 சதவீத வாக்குகள் பதிவாகின. தமிழகத்தில் 72 புள்ளி 09 சதவீத வாக்குகள் பதிவானதாக தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்ய பிரதா சாகு அறிவித்துள்ளார். அதிகபட்சமாக தர்மபுரி மக்களவைத்தொகுதியில் 81.40% வாக்குப்பதிவாகி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.