மக்களைப் பற்றி ஒடிசா மாநில அரசுக்கு கவலையில்லை என மத்திய அமைச்சரும், பாஜக வேட்பாளருமான தர்மேந்திர பிரதான் தெரிவித்துள்ளார்.
சம்பல்பூரில் செய்தியாளர்களிடம் பேசிய தர்மேந்திர பிரதான்,
நாட்டின் மிகப்பெரிய நதியான மகாநதி, ஹிராகுட் வழியாக பாய்வதாகவும், ஆனால் இங்குள்ள ஆறு, குளங்கள் வறண்டு காணப்படுவதாக தெரிவித்தார்.
மத்திய அரசு 10 ஆயிரம் கோடி ரூபாய் அளித்த நிலையில், 800 கோடி மட்டுமே மாநில அரசால் செலவு செய்யப்பட்டுள்ளதாக CAG தணிக்கை அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.