தென் ஆப்பிரிக்காவின் ஏராளமான பகுதிகளில் வறட்சி காரணமாக விவசாயம் பெரிதளவில் பாதிக்கப்பட்டுள்ளது.
போதிய மழை இல்லாமல் கடும் வெயில் காரணமாக மக்காச்சோள பயிர்கள் கருகும் நிலையில் உள்ளது. இதனால் தங்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதாகவும் இதே நிலை நீடித்தால் தாங்கள் பெரும் நஷ்டத்தை சந்திக்க நேரிடும் என விவசாயிகள் வருத்தம் தெரிவித்தனர்.