பாகிஸ்தானில் இடைவிடாது பெய்து வரும் மழை காரணமாக கடுமையான வெள்ளப்பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
பாகிஸ்தானில் காடந்த வாரத்தில் இருந்தே இடை விடாமல் மழை பெய்து வருகிறது. இதனால் பல இடங்களில் குடியிருப்பு பகுதிகளில் வெள்ள நீர் சூழ்ந்ததால், பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.
குறிப்பாக சமன் மாவட்டம் அதிகளவில் பாதிப்படைந்ததால் பாதிக்கப்பட்ட பொதுமக்கள் முகாம்களில் தங்க வைக்கப்பட்டு வருகின்றனர். இதில் குழந்தைகள் உட்பட 135 பேர் பலியானதாக தேசிய பேரிடர் மேலாண்மை தெரிவித்துள்ளது.