ஹைதராபாத் நகரின் பல்வேறு பகுதிகளில் நேற்று மாலை பலத்த மழை பெய்தது. எல்.பி.நகர், வனஸ்தலிபுரம், ஹயத் நகர் உள்ளிட்ட பகுதிகளில் மழை வெளுத்து வாங்கியது.
திடீரென பெய்த மழையால் வெப்பம் தணிந்து குளிர்ச்சியான சூழல் நிலவியது. இதனால் பொதுமக்கள் நிம்மதி அடைந்தனர். வட தெலுங்கானா மாவட்டங்களில் இன்று இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.