உரிய விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டும் நகர்ப்புறங்களில் வாக்களிப்பதில் சுணக்கம் ஏற்பட்டுள்ளது என சென்னை மாவட்ட தேர்தல் அலுவலர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
சென்னை லயோலா கல்லூரியில் வாக்குப்பதிவு இயந்திரங்களை பாதுகாப்பு அறைகளில் வைக்கும் பணியினை, சென்னை மாவட்ட தேர்தல் அலுவலர் ராதாகிருஷ்ணன் ஆய்வு செய்தார்.
அப்போது பேசிய ராதாகிருஷ்ணன், உரிய விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டும்
நகர்ப்புறங்களில் வாக்களிப்பதில் சுணக்கம் ஏற்பட்டுள்ளது என தெரிவித்தார்.
வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள அறைகளில் 4 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளதாக தெரிவித்தார். மேலும், அடையாள அட்டை கொடுக்கப்பட்ட நபர்கள் மட்டுமே வாக்கு எண்ணும் மையங்களில் அனுமதிக்கப்படுவர் எனவும் அவர் தெரிவித்தார்.