தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணம் சாரங்கபாணி சுவாமி திருக்கோயிலில் கருட வாகன திருவீதியுலா விமரிசையாக நடைபெற்றது.
கும்பகோணத்தில் சாரங்கபாணி சுவாமி திருக்கோயில் சித்திரை தேரோட்டப் பெருவிழா, கடந்த 15-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.
இந்நிலையில் விழாவின் 4-ம் நாளில் உற்சவர் சாரங்கபாணி சுவாமி, சக்கரபாணி சுவாமி ஆகியோர் தனித்தனி தங்க கருட வாகனங்களில் எழுந்தருள, திருவீதியுலா சிறப்பாக நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு வழிபாடு செய்தனர்.