திருப்பத்தூர் மாவட்டம் நாட்றம்பள்ளி பேரூராட்சி பகுதியில் அதிமுக பேரூராட்சி நகர செயலாளரின் சொகுசு கார் வாக்குச்சாவடி மையம் அருகே நிறுத்தி வைக்கப்பட்டு இருந்தால் பறிமுதல் செய்யப்பட்டது.
அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் அமைக்கப்பட்டுள்ள வாக்குச்சாவடி அருகே அதிமுக பேரூராட்சி நகர செயலாளர் மகேந்திரன் என்பருடைய சொகுசு கார் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. அந்த காரை அதிகாரிகள் பறிமுதல் செய்து காவல்நிலையத்தில் ஒப்படைத்தனர்.