வாக்கு சதவீதம் குறைந்தாலும் எங்கள் வாக்குகள் அனைத்தும் எங்களுக்கு பதிவாகி இருக்கும் என தென் சென்னை தொகுதி பாஜக வேட்பாளர் தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்துள்ளார்.
தென் சென்னை தொகுதி பாஜக வேட்பாளர் தமிழிசை சௌந்தரராஜன் இன்று சென்னையில் இன்று செய்தியாளரை சந்தித்தார்.
அப்போது போசிய தமிழிசை சௌந்தரராஜன்,
தேர்தல் நேர்மையாக நடக்க வேண்டும். திமுக தோல்வி பயம் வந்தால் மாற்றுப்பாதையை கடைபிடிப்பர். மயிலாப்பூர் தொகுதியில் கள்ள ஓட்டு போட திமுகவினர் முயற்சித்தனர். திமுகவினர் 50 பேர் புகுந்து எங்களது ஏஜெண்ட்களை வெளியில் அனுப்பி விட்டனர்.
பல இடங்களில் தேர்தல் ஆணையம் குடும்பத்தையே பிரித்து விட்டது, கணவன், மனைவி பெயர் வேறு வேறு இடங்களில் இடம் பெற்றுள்ளது. பலரது பெயர்கள் இல்லாமல் போய்விட்டது. வெள்ளி, திங்கள் கிழமையில் தேர்தல் நடத்த கூடாது, புதன் கிழமை போல வைக்க வேண்டும்.
தேர்தல் விழிப்புணர்வு விளம்பரத்துக்கு கோடிக் கணக்கில் செலவு செய்வதை விட, வாக்காளர் அனைவரது பெயரும் பட்டியலில் இருக்கிறதா என்பதை ஆணையம் கண்காணிக்க வேண்டும். வாக்கு சதவீதம் குறைந்தாலும் எங்கள் வாக்குகள் அனைத்தும் எங்களுக்கு பதிவாகி இருக்கும் என நம்பிக்கையுடன் இருக்கிறேன் எனத் தெரிவித்தார்.