சித்தூர் மாவட்டத்தில் உள்ள குப்பம் சட்டமன்ற தொகுதியில் சந்திரபாபு நாயுடு சார்பில் மனைவி புவனேஸ்வரி, நகரியில் ரோஜா வேட்பு மனு தாக்கல் செய்தனர்.
அடுத்த மாதம் 13-ஆம் தேதி ஆந்திராவில் பொது தேர்தலுடன், மாநில சட்டமன்றத்திற்கும் தேர்தல் நடைபெறுகிறது.
இதற்கான வேட்பாளர்கள் தங்கள் வேட்பு மனுக்களை தாக்கல் செய்து வருகின்றனர்.
சித்தூர் மாவட்டத்தில் உள்ள குப்பம் சட்டமன்ற தொகுதியில் இருந்து தெலுங்கு தேச கட்சி வேட்பாளராக அக்கட்சியின் தலைவர் சந்திரபாபு நாயுடு மீண்டும் போட்டியிடும் நிலையில் அவர் சார்பில் அவருடைய மனைவி புவனேஸ்வரி பல்லாயிரக்கணக்கான கட்சி தொண்டர்கள், கட்சி பிரமுகர்கள் ஆகியோருடன் ஊர்வலமாக சென்று இன்று வேட்பு மனுவை தாக்கல் செய்தார்.
அதேபோல் நகரி தொகுதியில் இருந்து அமைச்சர் ரோஜா மீண்டும் மீண்டும் போட்டியிடுகிறார்.
ஒஎஸ்ஆர் காங்கிரஸ் கட்சி வேட்பாளராக சட்டமன்றத்திற்கு போட்டியிடும் ரோஜா, தனது ஆதரவாளர்கள், கட்சி தொண்டர்களுடன் ஊர்வலமாக சென்று வேட்பு மனு தாக்கல் செய்தார்.