கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர் கால்பந்து வீராங்கனைகளை ஊக்குவிப்பதற்காக தன் மனைவி உடன் ராஞ்சிக்கு சென்றுள்ளார்.
கிரிக்கெட் ஜாம்பவானான முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டல்கர் தன் மனைவி அஞ்சலி டெண்டுல்கருடன் ஜார்கண்ட் மாநிலத்தில் உள்ள ராஞ்சிக்கு சென்றார்.
அப்போது செய்தியாளர்களை சந்தித்த அவர், இளைஞர்கள் அறக்கட்டளையுடன் இணைத்து தன் அறக்கட்டளை செயல்பட்டு வருவதாகவும், அதில் உள்ள கால்பந்து வீராங்கனைகளை ஊக்குவிக்க தான் ராஞ்சிக்கு செல்வதாகவும் தெரிவித்தார்.
இதுக்குறித்து பேசிய அவர், ” இளைஞர்கள் அறக்கட்டளையுடன் எண்களின் அறக்கட்டளையும் இணைந்து செயல்பட்டு வருகிறது. இதில் பல பெண்கள் கால்பந்தாட்டத்தில் ஆர்வமாக உள்ளனர். அவர்களை ஊக்குவிப்பதற்காக நாங்கள் ராஞ்சிக்கு செல்கிறோம்” என்று தெரிவித்தார்.