காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல்காந்தி வயநாடு தொகுதியில் தோல்வி அடைவார் என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
மகாராஷ்டிர மாநிலம் நாந்தேட் மற்றும் ஹிங்கோலி தொகுதிகளில் பாஜக வேட்பாளர்களை ஆதரித்து பிரதமர் மோடி பிரச்சாரம் மேற்கொண்டார். நடைபெற்ற பாஜக கூட்டத்தில் பேசிய பிரதமர் மோடி,
நாடாளுமன்ற தேர்தல் முதல்கட்ட வாக்குப்பதிவில், வாக்களித்த அனைவருக்கும், குறிப்பாக முதல்முறை வாக்காளர்களுக்கு அவர் நன்றி தெரிவித்து கொண்டார்.
முதல்கட்ட வாக்குப்பதிவில் தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளர்களுக்கு அதிக அளவில் வாக்குகள் பதிவானதாக தகவல் கிடைத்துள்ளதாகவும் அவர் கூறினார்.
அமேதி தொகுதியை தொடர்ந்து வயநாடு தொகுதியிலும் ராகுல் காந்தி தோல்வி அடைவார் என்றும், ஏப்ரல் 26 ஆம் தேதிக்குப் பிறகு அவர் பாதுகாப்பான இடத்தைத் தேட வேண்டும் என்று மோடி தெரிவித்தார்.