இலவச கட்டாய கல்வி திட்டத்தின் கீழ் தனியார் பள்ளிகளில் மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்பபதிவானது வரும் 22ம் தேதி முதல் தொடங்குகிறது.
ஏழைக்குழந்தைகளும் தனியார் பள்ளிகளில் கல்வி கற்கும் திட்டமான ஆர்.டி.இ திட்டத்தின் படி, தனியார் பள்ளிகளில் 25 விழுக்காடு இடம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
இந்நிலையில் தனியார் பள்ளிகளில் மொத்தம் 1.10 லட்சம் இடங்கள் உள்ளதாகவும் இந்த திட்டத்திற்கான மாணவர் சேர்க்கை வருகிற 22.ம் தேதி முதல், rte.tnschool.gov.in எனும் இணையதளம் வாயிலாக விண்ணப்பிக்கலாம் எனவும் பள்ளிக்கல்வித்துறை அதிகாரிகள் தேரிவித்தனர்.