பாரீஸ் ஒலிம்பிக் போட்டியின் மல்யுத்தத்துக்கான ஆசிய மண்டல தகுதி சுற்றில் இந்திய வீரர்கள் தோல்வி அடைந்து வெளியேறினர்.
பாரீஸ் ஒலிம்பிக் போட்டியில் மல்யுத்தத்துக்கான ஆசிய மண்டல தகுதி சுற்று கிர்கிஸ்தானில் நேற்று தொடங்கியது.
இதில் இந்தியாவை சேர்ந்த அமன் செராவத் அரையிறுதிக்கு முன்னேறினார். அரையிறுதியில் உஸ்பெகிஸ்தானின் குலோம்ஜோன் அப்துல்லாவுடன் மோதிய அவர் 0-10 என்ற புள்ளி கணக்கில் தோல்வியடைந்து வெளியேறினார். இதே போல் 74 கிலோ பிரிவில் ஜெய்தீப், 125 கிலோ பிரிவில் சுமித் மாலிக் ஆகியோரும் தோல்வியை தழுவினர்.