கேன்டிடேட் செஸ் போட்டியில் சென்னையை சேர்ந்த கிராண்ட்மாஸ்டர் டி.குகேஷ் அமெரிக்க வீரருடன் முன்னிலை வகிக்கிறார்.
கேன்டிடேட் செஸ் போட்டி கனடாவில் நடைபெற்று வருகிறது. இதில் சென்னையை சேர்ந்த கிராண்ட்மாஸ்டர் டி.குகேஷ், ரஷிய வீரர் இயன் நெபோம்னியாச்சி, அமெரிக்காவின் ஹிகாரு நகமுரா ஆகிய 3 வீரர்கள் தலா 7.5 புள்ளிகளுடன் முன்னிலையில் உள்ளனர்.
அதேபோல் தமிழக வீரர் பிரக்ஞானந்தா 6 புள்ளியுடன் 5-வது இடத்திலும், விதித் குஜராத்தி 5 புள்ளியுடன் 6-வது இடத்திலும் உள்ளனர்.