திருப்பூரில் வாக்காளர் ஒருவரை திமுகவினர் துரத்தி துரத்தி தாக்கும் வீடியோ வைரலாகி வருகிறது.
மக்களவை தேர்தல் நடைபெற்ற நிலையில், திருப்பூர் தொகுதியில் திமுக மாமன்ற உறுப்பினர் மற்றும் திமுகவினர் பூத் அமைத்து இறுதி நேர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர்.
அப்போது கார்த்திக் என்பவரும், அவருடைய நண்பர்களும் திமுகவினரிடம் தங்கள் தொகுதிக்காக என்ன செய்தீர்கள் எனக் கேள்வி எழுப்பியுள்ளனர். இதனால் ஆத்திரமடைந்த திமுகவினர் அந்த இளைஞர்களை சரமாரியாக தாக்கியுள்ளனர்.