கிருஷ்ணகிரி மாவட்டம், ஒசூர் அருகே ஆன்லைன் டிரேடிங்கில் ஏற்பட்ட நஷ்டத்தால், கர்ப்பிணி மனைவியுடன், கணவன் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
பேகேப்பள்ளியைச் சேர்ந்தவர்கள் விஜயகுமார் – சந்தியா தம்பதி. இந்நிலையில் ஆன்லைன் டிரேடிங்கில் பணம் முதலீடு செய்து பல லட்ச ரூபாய் நஷ்டமடைந்ததால் மனமுடைந்த விஜயகுமார், நிறைமாத கர்ப்பிணியான தனது மனைவியுடன் ஒரே கயிற்றில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து சிப்காட் போலீசார் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர்.