சிவகங்கை அருகே விவசாயம் செழிக்க வேண்டி மீன்பிடி திருவிழா வெகுவிமரிசையாக நடைபெற்றது.
துவார் கிராமத்தில் மழை பெய்து, விவசாயம் செழிக்க வேண்டி வள்ளிக் கண்மாயில் மீன்பிடித் திருவிழா நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது.
அந்தவகையில் கோயில் வழிபாட்டிற்கு பின்னர், ஊர் பெரியவர்கள் வெள்ளைக் கொடியை அசைத்து மீன்பிடித் திருவிழாவை துவக்கி வைத்தனர்.
இதில் பூலாங்குறிச்சி, நெற்குப்பை உள்ளிட்ட சுற்றுவட்டாரங்களைச் சேர்ந்த நூற்றுக்கணக்கானோர் பங்கேற்று, வலை, பரி, கச்சா, தூரி ஆகிய பாரம்பரிய மீன்பிடி உபகரணங்களை கொண்டு மீன்களைப் பிடித்து அள்ளிச் சென்றனர்.