காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி மற்றும் பிரியங்கா காந்தி ஆகிய இருவரும் 3 மாதங்களுக்கு ஒரு முறை ஓய்வெடுக்க வெளிநாடுகளுக்கு செல்வதாக மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்துள்ளார்.
ராஜஸ்தான் மாநிலம் பில்வாராவில் நடைபெற்ற பாஜக பொதுக்கூட்டத்தில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா பங்கேற்று உரையாற்றினார்.
அப்போது உரையாற்றிய அமித் ஷா,
தீபாவளி பண்டிகையின் போது கூட பிரதமர் மோடி ஓய்வு எடுக்காமல் நாட்டுக்காக பணியாற்றியதாக தெரிவித்தார். ராஜஸ்தானில் உள்ள 25 தொகுதிகளிலும் பாஜக வேட்பாளர்கள் வெற்றி பெறுவார்கள் என்றும் அவர் கூறினார்.
மூன்றாவது முறையாக பிரதமரானால், இந்தியாவை உலகின் மூன்றாவது பெரிய பொருளாதாரமாக மாற்றுவோம் என்பது மோடியின் உத்தரவாதம் என்றும் அமித் ஷா தெரிவித்தார்.