திருப்பூர் மாவட்டம் அவிநாசியில் பழமை வாய்ந்த அவிநாசிலிங்கேசுவரர் கோயிலில் சித்திரைத் திருவிழா கொடியேற்றம் கடந்த 14-ம் தேதி நடைபெற்றது.
இந்நிலையில், பஞ்சமூர்த்திகள் 63 நாயன்மார்களுக்கு காட்சியளிக்கும் வைபவம் நடைபெற்றது. மூசிக வானத்தில் விநாயக பெருமானும், ரிஷப வாகனத்தில் சோமாஸ்கந்தரும், காமதேனு வாகனத்தில் கருணாம்பிகையம்மனும், மயில் வாகனத்தில் வள்ளி தெய்வானை சமேத சுப்ரமண்ய பெருமானும் காட்சியளித்தனர். விழாவில் திரளான பக்தர்கள் பங்கேற்றனர்.