பாரீஸ் ஒலிம்பிக் போட்டிக்கு இந்திய மல்யுத்த வீராங்கனை வினேஷ் போகத் தகுதி பெற்றுள்ளார்.
கிர்கிஸ்தானில் உள்ள பிஷ்கெக் நகரில் ஆசிய மல்யுத்த சாம்பியன்ஷிப் போட்டி நடைபெற்று வருகிறது.
இதில் பெண்களுக்கான 50 கிலோ எடை பிரிவில் இந்திய வீராங்கனை வினேஷ் போகத் 3 சுற்றுகளில் வெற்றி பெற்று ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி பெற்றுள்ளார்.