கன்னியாகுமரி மாவட்டம், திருவட்டார் அருகே கஞ்சா போதையில் ஏற்பட்ட தகராறில் பாட்டியை கொன்றுவிட்டு, பேரன் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
சாரூரைச் சேர்ந்த மூதாட்டி தாசம்மா மற்றும் அவரது பேரன் அஜித் ஆகியோர் ஒன்றாக வசித்து வந்துள்ளனர். இந்நிலையில் கஞ்சா போதையில் வீட்டிற்கு வந்த அஜித், தாசம்மாவை கீழே தள்ளி விட்டதில் கட்டிலில் மோதி அவர் உயிரிழந்தார்.
இதனால் செய்வதறியாது திகைத்த அஜித்தும், வீட்டிற்குள் சென்று தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.