வடசென்னையில் பாஜக மற்றும் மத்திய அரசு ஆதரவாளர்கள் பெயர்கள், அதிகாரிகள் துணையுடன் வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டு உள்ளதாக வடசென்னை பாஜக வேட்பாளர் பால் கனகராஜ் குற்றம் சாட்டியுள்ளார்.
வடசென்னையில் 2019 மற்றும் 2021-க்கு பின்னர் மாமன்ற உறுப்பினர் தேர்தல் உள்ளிட்ட அனைத்திலும் வாக்கு செலுத்தியவர்கள் பெயர் வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டுள்ளது.
பாஜக தொண்டர்கள், மத்திய அரசின் ஆதரவாளர்களை திட்டமிட்டே, வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கியுள்ளனர். எனவே, தகுந்த ஆதாரங்களைத் திரட்டி நீதிமன்றத்தில் வழக்குத் தொடருவோம் என்று வடசென்னை பாஜக வேட்பாளர் பால் கனராஜ் தெரிவித்தார்.