மகாவீரரின் போதனைகள் நாட்டை கட்டியெழுப்ப உத்வேகமாக உள்ளதாக பிரதமர் மோடி குறிப்பிட்டுள்ளார்.
நாடு முழுவதும் மகாவீர் ஜெயந்தி இன்று கொண்டாடப்படுகிறது. இந்நிலையில், மகாவீர் ஜெயந்தியை முன்னிட்டு பிரதமர் மோடி தமது எக்ஸ் வலைதளத்தில் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இது குறித்து பிரதமர் மோடி தனது எக்ஸ் பதிவில்,
महावीर जयंती के पावन अवसर पर देश के समस्त परिवारजनों को मेरी अनंत शुभकामनाएं। शांति, संयम और सद्भावना से जुड़े भगवान महावीर के संदेश विकसित भारत के निर्माण में देश के लिए प्रेरणापुंज हैं।
— Narendra Modi (@narendramodi) April 21, 2024
அனைத்து குடும்பங்களுக்கும் மகாவீர் ஜெயந்தி வாழ்த்துகள் என்றும், இந்த நாளில் மகாவீரரின் போதனைகளை நினைவு கூர்வோம் எனவும் தெரிவித்துள்ளார். அமைதி, கட்டுப்பாடு மற்றும் நல்லெண்ணம் தொடர்பான இறைவன் மகாவீரின் செய்திகள் வளர்ந்த இந்தியாவைக் கட்டியெழுப்ப நாட்டிற்கு உத்வேகமாக உள்ளன என பதிவிட்டுள்ளார்.