சென்னை, கண்ணகிநகர் பகுதியில் கஞ்சா போதையில் போலீசாரை சரமாரியாக தாக்கிய 3 பேர் கைது செய்யப்பட்டனர்.
சென்னையில் கஞ்சா புழக்கம் படிப்படியாக அதிகரித்து வருகிறது. இந்த நிலையில் கண்ணகி நகர் பகுதியில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது இரண்டு இளைஞர்கள் கஞ்சா போதையில் தகராறு செய்துக் கொண்டிருந்தனர். இதைக்கண்ட காவலர்கள் அவர்களை பிடிக்க முயன்றனர். அப்போது இரண்டு பேரும் போலீசாரை சரமாரியாக தாக்கிவிட்டு பீர் பாட்டிலால் குத்த முயன்றனர்.
பின்னர் இருவரும் போலீசாருக்கு கொலை மிரட்டல் விடுத்து விட்டு அங்கிருந்த தப்பியோடிய நிலையில் வழக்கு பதிவு செய்த போலீசார், குற்றவாளிகளை தீவிரமாக தேடி வந்தனர். இந்நிலையில் பிரேம், ராகுல், சந்தோஷ் குமார் ஆகிய 3 பேரை போலீசார் கைது செய்தனர்.