மக்களைவை தேர்தல் நடைபெற்ற நிலையில் ஐ.ஜே.கே நிறுவனரும், பெரம்பலூர் தொகுதி வேட்பாளருமான பாரிவேந்தர் நன்றி தெரிவித்து AI தொழில்நுட்ப வீடியோவை வெளியிட்டுள்ளார்.
தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி உள்ளிட்ட 21 மாநிலங்களுக்கு கடந்த 19-ம் தேதி தேர்தல் வாக்குப்பதிவு நடைபெற்ற நிலையில் கட்சி தொண்டர்களுக்கும், பொதுமக்களுக்கும் அரசியல் தலைவர்கள் நன்றியினை தெரிவித்து வருகின்றனர்.
அந்த வகையில் ஐ.ஜே.கே நிறுவனரும் பெரம்பலூர் தொகுதி வேட்பாளருமான பாரிவேந்தர் தனது கட்சி நிர்வாகிகளுக்கு நன்றி தெரிவித்து AI தொழில்நுட்பத்தை பயன்படுத்தி வீடியோ வெளியிட்டுள்ளார்.
அதில் தன்னுடன் இரவு பகலாக உழைத்த ஐஜேகே நிர்வாகிகள், தொண்டர்கள் அனைவருக்கும் மனமார்ந்த நன்றிகள் என குறிப்பிட்டுள்ளார்.